Published Date: May 7, 2025
CATEGORY: CONSTITUENCY

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வடக்கு, கிழக்கு கோபுரம் சந்திப்பு தெற்கு கோபுரம் பகுதிகளில் இரண்டு இலவச கழிப்பறைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கூடுதலாக வடக்கு, கிழக்கு கோபுரம் சந்திப்பில் தீயணைப்பு துறை முன்பகுதியில் மாநகராட்சி மற்றும் தனியார் வங்கி சார்பில் புதிய கழிப்பறை கட்டிடம் அமைக்கப்பட்டது. இதனை நேற்று தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பொன் வசந்த், மாவட்ட கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, மாமன்ற உறுப்பினர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Media: Dinakaran